KOLNews

வெளியே போ..! - ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்..!

ஈராக்கின்  ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அந்த நாட்டுக்கு  ராணுவ உதவி அளிக்கும் வகையில் 5 ஆயிரம் அமெரிக்க வீரர்கள், அங்கு களம் இறங்கி முகாமிட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே ,  ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை தொடுத்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறதுசமீபத்தில், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

அத்துடன் இந்த தாக்குதலில் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திசும் பலியானார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதையடுத்து, ஈராக்கில் அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் விளைவாக அங்குள்ள அமெரிக்க படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அமெரிக்கா, ஈராக்கில் இருந்து தங்கள் நாட்டு வீரர்கள் வெளியேற மாட்டார்கள் என்று கூறியதுடன், படைகளை வெளியேற்ற ஈராக் வற்புறுத்தினால் அந்த நாட்டின் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்தது.

இந்தநிலையில் அங்குள்ள ஷியா பிரிவு முஸ்லிம் அமைப்பின் மதகுரு முக்ததா அல் சதார் ,அமெரிக்க படைகளை உடனடியாக வெளியேற்ற வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

அதநை ஏற்று, நேற்று தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள 2 முக்கிய இடங்களில் ஆயிரக்கணக் கான மக்கள் வீதிகளில் இறங்கி அமெரிக்க படைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக,பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள அல் ஹவுரியா சதுக்கத்தில் இருந்து வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பசுமை மண்டலம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.

ஏராளமான பெண்களும் கலந்து கொண்ட இந்த பேரணியில் அமெரிக்காவுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பபட்டது. மேலும் பேரணி சென்றவர்களுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு படைவீரர்கள் போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.

பேரணியில் சென்றவர்கள்  “அமெரிக்கா வேண்டாம், இஸ்ரேல் வேண்டாம், ஊழல் அரசுகள் எதுவும் ஈராக்கில் இருக்க வேண்டாம்” என கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

English Summary

go out..! People's struggle against US forces in Iraq

Latest Articles

KOLNews