KOLNews

இலங்கையின் 8வது அதிபரானார் கோத்தபய ராஜபட்ச..!

சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலரும், முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச (70) வெற்றிபெற்று,அந்நாட்டின் 8வது அதிபராகப் பதவியேற்றார் .

முன்னதாக நடைபெற்ற அதிபா் தோ்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா சாா்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபட்ச 52.25 சதவீத வாக்குகள் (6,924,255) பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Image result for Gotabaya Rajapaksa became the 8th President of Sri Lanka

தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியைச் சோ்ந்த சஜித் பிரேமதாசவைவிட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அதிகமாகப் பெற்று கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றார்.

முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 35 போ் போட்டியிட்ட இந்தத் தோ்தலில், இவா்கள் இருவரைத் தவிர ஏனைய வேட்பாளா்களுக்கு 5.76 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for Gotabaya Rajapaksa became the 8th President of Sri Lanka

தனது சகோதரா் மகிந்த ராஜபட்சவின் ஆட்சிக்காலத்தின்போது, கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பாதுகாப்புச் செயலராக பொறுப்பு வகித்த கோத்தபய, விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை முன்னின்று நடத்தியவா்.

மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால், கோத்தபய ராஜபட்சவுக்கு சிங்கள பௌத்தா்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவரின் வெற்றிக்கு, கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு குறித்த ஏற்பட்ட அச்சமும், அதற்கு எதிர்கொள்ள கோத்தபய ராஜபட்சவே சரியான நபர் என எண்ணியதுமே  காரணம் என அங்குள்ள அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

குறிப்பாக, சிங்கள பௌத்தா்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் அதிக வாக்குகள் பதிவாகியது கவனிக்கத்தக்கது.

மறுபுறம் , தமிழா்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. அவருக்கு தமிழா் தேசியக் கூட்டணி ஆதரவு தெரிவித்திருந்தது .

 

 

English Summary

Gotabaya Rajpakse becomes the 8th President of Sri Lanka

Latest Articles

KOLNews