KOLNews

எச் 4’ விசாதாரர்களுக்கு பணி அனுமதி..! - அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் மகிழ்ச்சி

வாஷிங்டன்,  அமெரிக்காவில் பணி அனுமதி இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற வகைசெய்ய, அந்நாட்டு குடியேற்ற கொள்கையை திருத்த வலியுறுத்தி ‘எச் 4’ விசாதாரர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க கோர்ட்டு, ‘எச் 4’ விசாதாரர்களின் பணி அனுமதி காலாவதியானதும், விண்ணப்பம் இன்றி தானாகவே அவர்களுக்கு பணி அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைக்கு உத்தரவிட்டது. 

இந்நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் இதனை ஏற்று ‘எச் 4’ விசாதாரர்களுக்கு தானாக பணி அனுமதி கிடைக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் எச் 4’ விண்ணப்பதாரர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள இந்திய பெண்கள் அதிக அளவில் பெயன்பெறுவர் என எதிரிபார்க்கப்படுகிறது. 

English Summary

H4 visa holders allowed to work ..! - Happiness for Indians working in the United States

Latest Articles

KOLNews