KOLNews

இந்தியர்களுக்கு நவராத்திரி வாழ்த்து..! - வாக்குகளை பெற ஜோ பிடன், கமலா ஹாரிஸ் நூதன முயற்சியா..?

வாஷிங்டன், இந்தியர்கள் கொண்டாடும்  நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நவராத்திரி வாழ்த்திணை தெரிவித்துள்ளார் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் 

அவருடன் கமலாஹாரிசும் நவராத்திரி வாழ்த்து கூறியுள்ளார்..வரும் நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும்  டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவில் வசிக்கும்  40 லட்சம் இந்தியர்ககளில் 25 லட்சம் பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள்.என்பதால் அவர்களின்  வாக்குகளை பெறுவதில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே போட்டி நிலவுகிறது. ஜோ பிடன் தனது துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை நிறுத்தியுள்ளதால், அவருக்கு இந்தியர்களின் ஆதரவு அதிகமாகியிருக்கிறது.இந்நிலையில், இந்தியாவில் நவராத்திரி விழாவை ஒட்டி அமெரிக்க இந்தியர்களும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையெடுத்து, ஜோ பிடனும், கமலா ஹாரிசும் இந்தியர்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜோ பிடன் தனது டுவிட்டர் வாழ்த்து செய்தியில், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் அமெரிக்காவில் தீயவை அழிந்து புதிய நல்ல தொடக்கம் ஏற்பட வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். அதே போல, கமலா ஹாரிஸ் தனது வாழ்த்து செய்தியில், நமது சமூகத்தில் மேலும் பல உயர்வுகளை பெற இந்த விழா நமக்கு சிறந்த ஊக்கம் அளிக்க வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

English Summary

Happy Navratri to Indians ..! - Is Joe Biden and Kamala Harris an innovative attempt to get votes?

Latest Articles

KOLNews