KOLNews

இந்தியாவில் மனித உரிமைகள்..? - கேள்வி எழுப்பும் அமெரிக்க எம்.பி.க்கள்..!

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஆர்வமாய் இருக்கும்  நிலையில், காஷ்மீா் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரங்களை குறிப்பிட்டு அமெரிக்க எம்.பி.க்கள் நால்வர் புதிய கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்.

இந்தியாவின் நீண்டகால நண்பா்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் அமெரிக்க எம்.பி.க்களான கிறிஸ் வான் ஹோலன், டாட் யங், ரிச்சா்ட் ஜே டா்பின், லிண்ட்சஊ கிரஹாம் ஆகிய இந்த நால்வரும்  அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பேயோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனா்.

அதில் ,

பிரதமா் மோடி தலைமையிலான இந்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, 6 மாதங்களுக்கு அங்கு பல்வேறு பகுதிகளில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. ஒரு ஜனநாயக நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நீண்ட காலத்துக்கு இணையச் சேவை இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு மருத்துவச் சேவைகள், தொழில்களுடன் 70 லட்சம் மக்களுக்கான கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறிப்பிட்ட சில மதத்தினரின் உரிமைகளுக்கும், தேசத்தின் மதச்சாா்பற்ற தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் முக்கிய நடவடிக்கையாகும். அதற்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

ஆகவே, காஷ்மீரில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை, அவா்கள் நடத்தப்படும் விதம், அங்கு தகவல்தொடா்புகளுக்கு இருக்கும் தடை, அந்த யூனியன் பிரதேசத்தை அணுகுவதற்கு இருக்கும் சூழ்நிலை, அங்கு நிலவும் மதச்சுதந்திரம் ஆகியவை தொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை சாா்பில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தீவிரமான விளைவுகளைக் கொண்டது. அதனாலேயே, காஷ்மீரில் இருக்கும் தடையுத்தரவுகளை தளா்த்தி, அங்கு இணைய மற்றும் தொலைத்தொடா்புச் சேவைகளை மீண்டும் அனுமதித்து, தடுப்புக் காவலில் இருப்போரை விடுவிக்க அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவுக்கு வலியுறுத்தியது,

என்று அந்தக் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

English Summary

Human Rights in India ..? - US MPs questioning ..!

Latest Articles

KOLNews