KOLNews

'கிரிக்கெட்'ன்னா எனக்கு அவ்ளோ புடிக்கும்..! - போட்டியை காண குப்பை அள்ளிய 12 வயது சிறுவன்..!

ஆஸ்திரேலியாவில்,  சிறுவன் ஒருவன், குப்பைகளை அள்ளியதன் மூலம் தான் சேர்த்த பணத்தை கொண்டு மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வரும் போட்டியை காண வந்தது அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேக்ஸ் என்னும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளான்.

அப்போது கிரிக்கெட்டில் போட்டியில் மிகவும் பாரம்பிரயமிக்க போட்டியாக கருதப்படும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை இங்கிலாந்தில் சென்று பார்க்க விரும்பினான்.

அவனது இந்த ஆசையை தன அம்மாவிடம் கூறினார். அப்போது அருகில் உள்ள வீடுகளில் வார இறுதியில் குப்பைகளை அள்ளி வெளியில் கொண்டு போட்டால் ஒரு டாலர் சம்பளமாக வாங்கலாம் என தாயார் யோசனை கூறியுள்ளார்.

இதனை மனதில் ஏற்றிய மேக்ஸ், அதன்படியே  வாரந்தோறும் குப்பைகளை அள்ளி பணம் சம்பாதித்துள்ளார். மேலும், அந்த பணத்தை தனது தந்தையிடம் கொடுத்து ஆஷஸ் தொடரை பார்க்க டிக்கெட் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.

Image result for I love 'Cricket' that much..! - 12 year old boy who collected garbage ..!

அதையடுத்து, அவரது தந்தை மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற போட்டியை பார்க்க குடும்பத்துடன் வந்து தனது மகன் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

இந்த தகவல் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு தெரிய வர பேட் கம்மின்ஸ், ஸ்மித் ஆகியோர் மேக்ஸை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். மேலும், அணி வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை பேட் கம்மின்ஸ் மேக்ஸ்க்கு வழங்கி அவனை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துள்ளனர்..

English Summary

I love 'Cricket' that much..! - 12 year old boy who collected garbage ..!

Latest Articles

KOLNews