KOLNews

'ஊரடங்கை தளர்த்தினால் ..? - உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு..!

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் கொரனா தொற்று பரவல் தொடர்பாக உலக நாடுகளுக்கு அதிமுக்கிய எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது - 

'கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 55 லட்சத்தை எட்டும் நிலையில் 3.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் சில நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், முற்றிலும் ஒழிந்து விடும் என நாம் ஊகிக்க வேண்டாம்.

கொரோனா தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் அவசரமாக  தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க கூடும். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்". என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English Summary

'If lockdown is relaxed ..? World Health Organization

Latest Articles

KOLNews