KOLNews

காஷ்மீர் பற்றி பேச நான் இருக்கேன்..! - வரிந்து கட்டும் இம்ரான் கான்..!

நேற்று பாகிஸ்தானில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம் குறித்து உலகம் முழுவதும் பரப்ப உள்ளதாக பேசியுள்ளார். 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதையடுத்து, பாகிஸ்தான் அதற்கு தனது கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறது.

அந்தவகையில்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது குறித்து அந்நாட்டு மக்களுக்கு நேற்று முக்கிய உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 

"காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தும் வரை, இந்த அரசு காஷ்மீர் மக்களுடன் துணை நிற்கும் என்பதை பாகிஸ்தான் மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். நான் காஷ்மீரின் தூதராக செயல்படுவேன் என்று கூறியுள்ளேன். காஷ்மீர் விவகாரம் குறித்து, உலகம் முழுவதும் பரப்புவேன். நான் தொடர்பில் உள்ள தலைவர்களிடம் காஷ்மீர் குறித்து பேசியுள்ளேன். இந்த விவகாரத்தை நான் ஐ.நா.விலும் எழுப்புவேன்.

காஷ்மீருக்கு ஆதரவான நிலைப்பாட்டை முஸ்லிம் நாடுகள் எடுக்காதது குறித்து நாட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக செய்தித்தாள்களில் படித்தேன். நீங்கள் ஏமாற்றமடைய வேண்டாம். ஒரு சில நாடுகள் வேண்டுமானால் தங்களது பொருளாதார நலன் கருதி இந்த விவகாரத்தை எழுப்பாமல் இருக்கலாம். ஆனால், இந்த விவகாரம் குறித்து அவர்களும் ஒரு நாள் நிச்சயம் பேசித்தான் ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம்", என்றார் .

மேலும், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி வரலாற்றுப் பிழையை செய்துள்ளார்" என தெரிவித்தார்.

இதற்கிடையே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்த கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவார் என நம்பப்படுகிறது.

English Summary

I'll be here to talk about Kashmir ..! - Imran Khan

Latest Articles

KOLNews