KOLNews

அமெரிக்காவில், இது எத்தனையாவது முறை..? - துப்பாக்கிச்சூத்தில் 2 மாணவர்கள் பலி..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா கிளாரிட்டாவில் சாகஸ் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்; அத்துடன் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

முன்னதாக, இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் தன் 16வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். 

Image result for In the US, how many times is this? - 2 students killed in gunfire ..!

இந்நிலையில், பள்ளிக்கு கறுப்பு ஆடையில் வந்த அந்த சிறுவன் திடீரென தன் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார்.

அப்போது, 16 வயது மாணவி ஒருவர் மீதும் 14 வயது மாணவன்ஒருவன்  துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர்.

அதோடு, மேலும் மூன்று பேர் குண்டு காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தின் போது, துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் அங்கேயே தன் தலையில் சுட்டுக் கொண்டார்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடுக்கான காரணம் தெரியாத நிலையில்  போலீசார் விசாரணையை தீவீரப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வவ்போது நடப்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

In the US, how many times is this? - 2 students killed in gunfire ..!

Latest Articles

KOLNews