KOLNews

அமெரிக்கா பொய் சொல்லுகிறதா ..? - கொரோனா பலி எண்ணிக்கை குறித்து திடுக்கிடும் தகவல்

வாஷிங்டன், அமெரிக்க ஜனநாயகத்தின் சிறப்பே, அங்கு அளப்பரிய தேசப்பற்று இருந்தாலும்,  தேசத்தை பற்றிய பிம்பத்தை கட்டமைக்க கண்மூடித்தனமாக கூறப்படும் உண்மையற்ற தகவல்களை விமர்சிக்கவும் அதே அமெரிக்காவில் சிலர் இருப்பார்கள். பொருளாதார ஏதேச்சியாதிகாரமாகட்டும்,  அமெரிக்கா மேற்கொள்ளும் புவி அரசியலாகட்டும், எதுவாகினும்  அந்நாட்டு அரசாங்கத்தின் முகமூடியை கிழிக்க அங்கேயே சிலர் இருப்பார்கள். 

அந்தவகையில், கொரோனா மரணங்கள் குறித்து அமெரிக்காவின் தகவலில் உள்ள உண்மை  குறித்து அமெரிக்காவின் மூத்த தொற்று நோய் நிபுணர் அந்தோணி பாசி, திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதுவரை அங்கு, 5 லட்சத்து 81 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறும் நிலையில், உண்மையான பலி எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்

Leading Cause of Death in U.S.? Hint: It Isn't Covid-19 - WSJ

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தற்போது உலகின் கொடூரமான கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை அமெரிக்கா கணக்கிட்டுள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும். இது சரியாக கணக்கீடு என்று நான் நினைத்ததை விட சற்று அதிகம், உங்களுக்கு நன்றாக தெரியும், நாம் ஒரு வரலாற்று தொற்றுநோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இது போன்றதொரு நோயினை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கண்டதில்லை” என்று தெரிவித்தார்.

English Summary

Is America lying? - Startling information on the number of corona victims

Latest Articles

KOLNews