KOLNews

ஜப்பானில் திடீர் பரபரப்பு ..! - ஒலிம்பிக் போட்டிகள் நடத்த எதிர்ப்பு

விளையாட்டு போட்டிகளை ரசிப்பவர்களுக்கு ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பது மகிழ்ச்சியை அளித்தாலும், அது நடைபெறும் ஜப்பான் நாட்டின் மக்களிடத்தில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. இந்த சர்வதேச போட்டியால் கொரோனா தாக்கம் அதிகமாகவும் என்கிற அச்சத்தில், ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக்கூடாது என அங்கு சிலர் வலியுறுத்தி வருகின்றனர். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு நடைபெற்றிருக்கவேண்டிய ஒலிம்பிக் போட்டிகள்  இந்நிலையில், போட்டிகள் நடைபெறும் ஜப்பான் தலைநகர் டோக்யோ மற்றும் சுற்றுப் புறங்களில் மீண்டும் கொரோனா பரவல அதிகரித்துள்ளதால்  , போட்டிகள் நடைபெறும் போது பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என ஜப்பான் அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது . 

அத்துடன் , ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் வரை அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியும் அரசு உத்தரவிட்டுள்ளது . இந்நிலையில் , கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவேண்டுமென்றால் விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடாது என பத்துக்கும் மேற்பட்டோர் ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தின் முன் போராட்டம் நடத்தினர் . ஒலிம்பிக் ஜோதி டோக்கியோ நகரை அடைந்த போது இப்போராட்டம் நடைபெற்றதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. 

English Summary

Japan ..! - Opposition to hosting the Olympics

Latest Articles

KOLNews