கடந்த வருட ம் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் வென்ற ஜோ பைடன் , இன்று அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியேற்றார். அவருக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் அவருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் துணை அதிபராக பதவியேற்று, மூலம் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்,
முன்னதாக ஜோ பைடன் குடும்பத்தை சேர்ந்த 127 ஆண்டு பழமையான பைபிளை வைத்து பதவியேற்றார். அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்கும் இரண்டாவது கத்தோலிக்க கிறிஸ்துவர் பைடன் என்பது அங்கு கூடுதலாக பேசப்படும் விஷயமாகி உள்ளது.
அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட பைடன் 306 மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளைப்பெற்ற நிலையில் வாஷிங்டனில் காப்பிட்டால் வளாகத்தில் பதவியேற்பு விழா இவ்விழாவில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஜார்ஜ் புஷ் பராக் ஒபாமா போன்றோர் கலந்து கொண்டனர். விழாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Joe Biden becomes US President - Trump skipped the ceremony ..!