KOLNews

நம்பிக்கை வாக்கெடுப்பில் கே.பி.ஷர்மா அரசு தோல்வி.! - நேபாள அரசியலில் சிக்கல்.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று அந்நாட்டு  நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது.

முன்னதாக, முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பிரதமர் ஷர்மா ஓலி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை  திரும்பப் பெற்றதனால்,  ஷர்மா ஒலி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதையடுத்து, நேற்று நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில், பிரதமர் ஷர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனையடுத்து,  வாக்கெடுப்பு நடைபெற்றது. 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 136 வாக்குகளை பெற்றால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் ஷர்மா ஒலிக்கு ஆதரவாக 93 வாக்குகளே பதிவானதால், ஷர்மா ஒலி அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதனையடுத்து மீண்டும் நேபாள் தேர்தலை சந்திக்குமா, அல்லது வேறேதும் மாற்றம் வருமா ? என்பது அடுத்த ஒரு சில நாட்களில் தெரியும் என சொல்லப்படுகிறது.

English Summary

KP Sharma government loses confidence vote - Problem in Nepali politics.

Latest Articles

KOLNews