வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியில் வந்து உலாவ இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து என பல நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள், விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்னும் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து அதில் தங்கி இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏதேனும் பழுதுகள் ஏற்படுகிறபோது அல்லது அதன் தளவாடங்களை மாற்றி அமைக்க வேண்டியபோது அல்லது பிற பணிகளின் போது, அதனுள் தங்கி இருக்கிற வீரர்கள் வெளியே வருவார்கள். விண்வெளியில் நடப்பார்கள்.
அப்போது அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை செய்து முடித்துவிட்டு மீண்டும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றுவிடுவார்கள். இது வழக்கமான விஷயம் தான்.
இந்நிலையில், அடுத்த மாதம் 28-ந் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடக்கப்போகிறார்கள் என்று ‘நாசா’ அறிவித்துள்ளது.
மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை ஏற்றிச்செல்கிற விண்கலங்கள் இறங்குவதற்கான இரண்டாவது தளத்தை அமைக்கிற பணியில் இந்த வீரர்கள் ஈடுபடுவார்கள் என சொல்லப்படுகிறது.
English Summary
Let's go for a little walk... - Scientists who going to walk in space ..!