KOLNews

கொரோனா வைரசுடன் கடிதங்கள் வரலாம்..! - உலக தலைவர்களை எச்சரிக்கும் இன்டர்போல்..!

உலக தலைவர்களை குறி வைத்து கரோனா வைரஸ் தடவப்பட்ட கடிதங்கள் வர கூடிய அபாயம் இருப்பதால்  மிக கவனமாக கவனமாக இருக்குமாறு உலக நாட்டுத் தலைவர்களை பன்னாட்டு காவல்துறையில் அமைப்பான இன்டர்போல் எச்சரித்துள்ளது.

ஏழை பணக்காரர், சாதி, மத ,இன, மொழி வித்தியாசம் இன்றி  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றினால்  உலக தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டன் பிரதமர், ரஷிய அதிபர், என பலரையும் விட்டுவைக்கவில்லை கொரானா. 

இந்நிலையில், 194 உறுப்பு நாடுகளில் உள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கான தொடர்பான வழிகாட்டுதல்களைப் சர்வ தேச காவல்துறையான இண்டர்போல் சமீபத்தில் வழங்கியது. அதில் முக்கிய தலைவர்களுக்கு கரோனா வைரஸ் தடவப்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து கவனமுடன் செயல்பட  வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தலைவர்களின் அலுவலக பணியாளர்களை தொடர்ச்சியாக மருத்துவ கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் மருத்துவப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியத்துடன் செயல்பட வேண்டாம் எனவும் இன்டர்போல் கேட்டுக்கொண்டுள்ளது.

English Summary

Letters may come with corona virus ..! - Interpol warns world leaders ..!

Latest Articles

KOLNews