தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த மகாத்மா காந்தியின் பேரன் சதீஷ் துபேலியா (வயது 66) கொரோனா நோய் தொற்றின் காரணமாக மரணமடைந்தார்.
ஏற்கனவே கடந்த ஒரு மாத காலமாக நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவருக்கு கொரோனா பாதிப்பும் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக துபேலியாவின் சகோதரி உமா துபெலியா-மெஸ்திரி தெரிவித்துள்ளார்.
சதீஷ் துபேலியா , தென்னாபிரிக்க ஊடகங்களில், வீடியோகிராஃபர் மற்றும் புகைப்படக் கலைஞராக அறியப்பட்டவர் .டர்பன் நகருக்கு அருகிலுள்ள பீனிக்ஸ் குடியேற்றத்தில் மகாத்மாவால் தொடங்கப்பட்ட பணிகளைத் தொடர காந்தி மேம்பாட்டு அறக்கட்டளைக்கு உதவுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தவர்.
அத்துடன், அவர் அனைத்து சமூகத்தினருக்கும் உதவும் வகையில் பல சமூக நல அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டவர் என தெரிகிறது.
இந்நிலையில் அவர் மறைவுக்கு அவரது நண்பர்கள் மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
English Summary
Mahatma Gandhi's grandson Satish Dubelia passes away