KOLNews

இனி..கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கப்படும்..! - சட்டம் நிறைவேற்றியது பாகிஸ்தான்

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டத்தை பாகிஸ்தான் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது 

பாகிஸ்தானில் அண்மை வருடங்களாக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தநிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பாலியல் குற்றவாளிகளின் தண்டனைகளை விரைவுபடுத்துவதற்கும்  தண்டனைகளை கடுமையாக்குவதற்கும் இந்த சட்டம் வழிவகை செய்யும்.

Dunya News: Pakistan:-PPP, PTI stage protest demos against minor girl'...

ஏற்கனவே  கடந்த ஆண்டு கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளித்து ஓராண்டுக்கு பின், தற்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்நாளின் எந்த காலகட்டத்திலும் உடலுறவு கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுவார் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்பவரை பகிரங்கமாக துாக்கிலிட வேண்டும் என்றும்  ஷரியாவில் ஆண்மை நீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆக இந்த சட்டம் இஸ்லாத்திற்கு எதிரானது என ஒரு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் மசோதா நிறைவேற்றப்பட்டது 

English Summary

Masculinity will be removed for rape offenders ..! - The law was passed by Pakistan

Latest Articles

KOLNews