KOLNews

உறுப்பு நாடுகளே..உதவுங்கள்..! - நிதி சிக்கலில் ஐ.நா.

ஐக்கிய நாடுகள் பொது சபை செயலர் ஆன்டோனியோ கட்டர்ஸ் , சபை 230 மில்லியன் டாலர் பணப் பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐக்கிய நாடுகள் பொது சபையில் பணிபுரியும் 37 ஆயிரம் ஊழியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

நடப்பு 2019ம் ஆண்டில் ஐ.நா., உறுப்பு நாடுகள், வழக்கமான பட்ஜெட் நடவடிக்கைகளுக்கு தேவையான மொத்த தொகையில் 70 சதவீதத்தை மட்டுமே வழங்கியுள்ளன. இதனால் , செப்டம்பர் மாத இறுதியில் 230 மில்லியன் டாலர் பணப்பற்றாக்குறையாக உள்ளது. எங்கள் பணப்புழக்க நடவடிக்கைகள், மாத இறுதிக்குள் குறையும் அபாயத்தை நாங்கள் உணர்ந்துளோம்.

Image result for UN

சபையின் நிதி வளத்திற்கான இறுதி பொறுப்பு உறுப்பு நடுகளிடம் உள்ளது. செலவுகளை குறைக்க, மாநாடுகள், கூட்டங்களை ஒத்திவைத்தல் மற்றும் சேவைகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதேநேரத்தில், அதிகாரப்பூர்வ பயணத்தை, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மேற்கொள்வது. பணப்புழக்க சிக்கல்களை தீர்க்க, ஐக்கிய நாடுகளுக்கு உறுப்பு நாடுகள் உதவ முன்வர வேண்டும். ஐ.நா.,வின் நிதிநலனுக்கு , உறுப்பு நாடுகளே பொறுப்பு. ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

என அந்த கடிதத்தில் ஆன்டோனியோ கட்டர்ஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து பேசிய ஐ.நா., அதிகாரி ஒருவர் , 'நிதி பற்றாக்குறை காரணமாக, தேவையான பணத்தை வழங்கும்படி உறுப்பு நாடுகளிடம் ஐ.நா., பொது செயலர் குட்ரெஸ் வலியுறுத்தினார். ஆனால், பணம் வழங்க அவை மறுத்துவிட்டன', என்றார் . 

English Summary

Member States .. Help ..! - United Nations in Financial Issue

Latest Articles

KOLNews