KOLNews

புதிய மசோதா தாக்கல் - சீனாவுக்கு எதிராக வரிந்து கட்டும் அமெரிக்கா..!

வாஷிங்டன்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில், சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளை மீண்டும்  தங்கள் நாட்டிற்கு கொண்டு வர உதவும் வகையில் ஒரு மசோதா ஒன்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரானா ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாய் ஏற்பட்ட பொருளாதார சிக்கலில் இருந்து மீள உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.  இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்களை தங்கள் நாட்டுக்கு அளிக்கும் விதமாக பிரிங் அமெரிக்கன் கம்பெனி ஹோம் அக்ட் என்ற புதிய சட்ட மசோதா ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதில் குறிப்பாக,  சீனா அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நண்பன் அல்ல. இனியும் நாம் சீனாவை வர்த்தகத்திற்காக நம்பி இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆக உள்நாட்டிலேயே முதலீட்டினை ஊக்குவிப்போம் என்பதும் மசோதாவில் வலுயுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சீன நிறுவனங்களுக்கு அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடுவதை தடுக்க வழிவகுக்கும் சட்டத்தினை நேற்று அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரித்தது. இதனையடுத்து அதன் பங்குகள் பெருமளவில் சரிந்தது.

ஏற்கனவே, அமெரிக்கா ஜனாதிபதி பாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட சீன நிறுவனங்கள், அமெரிக்காவின் தணிக்கை கணக்கினை சரிவர பின்தொடர்வதில்லை என்றும் இதனால் சீன நிறுவனங்கள் இதனால் நிச்சயம் பாதிக்கப்படும் என்றும் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

English Summary

New bill filed - America against China

Latest Articles

KOLNews