KOLNews

புதிய பிரைவசி திட்டம்..! ஒத்திவைத்தது 'வாட்ஸ் - ஆப்' நிறுவனம்

இன்று பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் “வாட்ஸ் ஆப்” செயலியின் பிரைவசி கொள்கைகளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது. ஒருமுறை மட்டும் இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது என்றும் பயனாளர்களுக்கு தகவல் வந்தது. 

அத்துடன், பிரைவசி பாலிசி அப்டேட் செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்த முடியாது என்றும்  தெரிவிக்கப்பட்டதால் வாட்ஸ் ஆப் பயனாளர்கள் செய்வதறியாது புலம்பினர்.

இந்த சூழலை கருத்தில் கொண்டு, இது குறித்து விளக்கமளித்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், “நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது. வாட்ஸ்ஆப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்.அதே போல், பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும். பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம். வாட்ஸ்ஆப் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் விளக்கமளிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தது.

இருப்பினும், பிரைவசி அப்டேட் பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் பல்வேறு பயனாளர்களும், சில ஊடகங்களும், மக்களின் உரையாடல்கள் மற்றும் தனிநபர் விவரங்களை அந்நிறுவனம் படிக்க முடியும் என்னும் தவறான புரிதல் நிலவுவதால், வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது திட்டமிடப்பட்ட புதிய வர்த்தக அம்சங்களை செயல்படுத்தும் முடிவை ஒத்தி வைத்துள்ளது.  

அதன்படி, வரும் பிப்ரவரி 8ந்தேதியில், ஒருவரது வாட்ஸ்ஆப் கணக்கும் தற்காலிக ரத்து செய்யப்படவோ அல்லது நீக்கமோ செய்யப்படாது என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.  இதேபோன்று வாட்ஸ்ஆப்பில், பிரைவசி மற்றும் பாதுகாப்பு எப்படி செயலாற்றுகிறது என்பது குறித்த விளக்கத்தையும் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

English Summary

New Privacy Plan ..! Postponed by 'Whats - App' Company

Latest Articles

KOLNews