KOLNews

நம்பிக்கையில்லா தீர்மானம் ..! பதவி இழந்தார் சுவீடன் பிரதமர்.?

சுவீடன் பிரதமர் ஸ்டெபன் லொகபனுக்கு ( Stefan Lofven ) எதிராக அந்த நாட்டு நாடாளுமன்றம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது . 

முன்னதாக கூட்டணியில் இருந்த இடதுசாரி கட்சி, புதிதாக அமைக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை வீடுகள் குறித்த சர்ச்சையையடுத்து , கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது . 

அதையடுத்து , பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டுவரப்பட்டுள்ளது . மொத்தம்  349 உறுப்பினர்களை கொண்ட ஸ்வீடன்  நாடாளுமன்றத்தில் , 181 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் . அத்துடன், சமூக ஜனநாயக கட்சித் தலைவரான பிரதமர் ஸ்டெபன் லொகபன் , ஒரு வாரத்திற்குள் பதவி விலக வேண்டும் அல்லது புதிய தேர்தலுக்கான அழைப்பை விடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

சுவீடனில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் ஒருவர் பதவி நீக்கப்படுவது இது முதல் முறை என சொல்லப்படும்  நிலையில் , பிரதமர் பதவி விலக தீர்மானித்தால் , புதிய அரசாங்கத்தை அமைக்க , சபாநாயகர் குறுக்கு கட்சி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

English Summary

No-confidence motion.! Sweden's Prime Minister lose the post..?

Latest Articles

KOLNews