KOLNews

பாகிஸ்தான் பயங்கரம் ..! - 10க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டு கொலை..!

11 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு பாகிஸ்தானில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், பலுசிஸ்தான் மாகாணத்தின் முச் நகரில்  நடந்தது, இது பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் மிகப் பெரிய ஆனால் குறைந்த மக்கள் தொகை கொண்டது, மாகாண தலைநகரான குவெட்டாவிலிருந்து தென்கிழக்கில் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சம்பவத்தில் பல சுரங்கத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். தாக்குதலுக்குப் பிந்தைய மொபைல் வீடியோ ஒன்று கொல்லப்பட்ட தொழிலாளர்கள் கைகள் முதுகுக்கு பின்  கட்டப்பட்டிருப்பதைக் காட்டியது. பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மை ஹசாரா ஷியைட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது, இவர்கள் கடந்த காலங்களில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.பாகிஸ்தானில் செயல்படும் பிரிவினைவாத பலூச்சிஸ்தான்  கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிற தீவிரவாத குழுக்கள் தான் வன்முறையில் இறங்குவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்த வாரம், பலூசிஸ்தானின் தொலைதூர ஹர்னாய் மாவட்டத்தில் ஒரு பாதுகாப்பு நிலையத்தில் தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதலில் குறைந்தது ஏழு துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. 

 

English Summary

Pakistan is terrible ..! - More than 10 miners hanged and killed ..!

Latest Articles

KOLNews