KOLNews

கன்னத்தில் அறையப்பட்ட அதிபர் இம்மானுவல் மக்ரோன்..! - பிரான்சில் பரபரப்பு

தென் கிழக்கு பிரெஞ்சு பகுதியில் மக்களை சந்தித்து, பொதுமுடக்கத்தின் தளர்வுகள் குறித்த தன்  மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முயன்ற  பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன், அங்கிருந்த ஒருவரால் கன்னத்தில் அறையப்பட்டார்.

இதனை ஆர்.எம்.சி ரேடியோ உறுதிப்படுத்தியுள்ளது. 

முன்னதாக , தளர்வுகளை அடுத்து உணவகங்கள் திறக்கப்படுவது குறித்து கலந்துரையாடி தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வண்ணம்,  தென் கிழக்கு பிரெஞ்சு பகுதியில் கம்பி வேலிகளுக்கு அப்பால் இருந்து பொதுமக்களுக்கு கைகுலுக்கி பேச முற்பட்டார் பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன்.அப்போது ஒரு நபர் முன்னாள் வந்து பட்டென கையை நீட்டி அதிபரை அறைந்தார்.  

தற்போது ஊடகங்களில் இந்த காட்சி வைரலாக வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் எதற்காக அறைந்தார் என்பது விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

English Summary

President Emmanuel Macron slapped on the cheek ..! - Excitement in France

Latest Articles

KOLNews