KOLNews

கொரோனா தடுப்பூசியை மறுத்து கண்டன பேரணி..! - வீதியில் இறங்கிய அமெரிக்கர்கள்.

அமெரிக்‍க தலைநகர் வாஷிங்டனில் கொரோனா தடுப்பூசி மற்றும் கட்டாய முகக்‍கவசம் அணிவதற்கு எதிராக,ஆயிரக்‍கணக்‍கானோர் கலந்துகொண்ட மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. 

அமெரிக்‍கா, கொரோனா தொற்றால்  இதுவரை 8 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்து விட்ட நிலையில், அந்நாட்டு அரசு  தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்‍கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக செலுத்திக்‍கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்‍கு முகக்‍கவசம் கட்டாயமாக்‍கப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்கர்க மக்‍கள், இதற்கு கடும் கண்டனம்​தெரிவித்துள்ளதோடு, வீதிகளில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கொரோனா தடுப்பூசி மற்றும் கட்டாய முகக்‍கவசம் அணிவதற்கு எதிராக, தலைநகர் வாஷிங்டனில் உள்ள தேசிய சினைவு சின்ன சதுக்‍கத்தில் குவிந்த மக்‍கள், அங்கிருந்து லிங்கன் நினைவிடத்திற்கு பேரணியாக சென்றனர்.  ஆயிரக்‍கணக்‍கானோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியில், கையில் தேசியக்‍ கொடி மற்றும் கண்டன பதாகைகளை கையில் ஏந்தியபடி, அரசுக்‍கு எதிராக முழக்‍கமிட்டு சென்றனர். 

English Summary

Rally against denial of corona vaccine ..! - Americans down the street.

Latest Articles

KOLNews