KOLNews

பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு..!

கடந்த 10ஆம் தேதி இஸ்ரேல் அரசுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் மூண்டதும், இரு தரப்பிலிருந்தும் ராக்கெட்டுகளும்  வான்வெளி தாக்குதலும் நடைபெற்று, பாலஸ்தீனிய பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டது தெரிந்ததே..! 

அதன்பின், அமெரிக்கா உள்ளிட்ட  உலக நாடுகளின் முயற்சிகளின் பலனாக தாக்குதல் முடிவுக்கு வந்துஅங்கு அமைதி நிலவுகிறது. அதையடுத்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு பாலஸ்தீனியர்கள் திரும்பி வருகின்றனர். 

இந்நிலையில், இஸ்ரேலியர்களை கத்தியால் குத்த முயன்றதாக எழுந்த புகாரின் பேரில், இரண்டு பாலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே  தொடர்ந்து வந்தாலும்,  தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இது நடந்திருப்பது , மீண்டும் அங்கு பதற்றத்தை உருவாகிவிடுமோ என்கிற அச்சம் இரு பகுதி மக்களிடமும் நிலவுகிறது.

English Summary

Shooting on Palestinians ..!

Latest Articles

KOLNews