சூதாட்டத்தை ஆதரித்ததால் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm செயலி நீக்கப்பட்டுள்ளது.
கூகுளின் அடிப்படையான விதிமுறைகளை மீறியதாக, பண பரிமாற்ற செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் செயலியான Paytm, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது -
ஒழுங்குபடுத்தாத எந்த சூதாட்டத்தையும் கூகுள் நிறுவனம் ஆதரிப்பதில்லை. சூதாட்டத்தை ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் செயல்களுக்கு ஆதரவு அளிக்காது ஆனால், Paytm நிறுவனம் இந்த விதிமுறைகளை மீறிவிட்டது.. இதன் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm செயலி நீக்கப்பட்டது.
இதனிடையே கூகுள் பிளே ஸ்டோரில் Paytm விரைவில் இடம்பெறும் என்றும், வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக இருக்கும் என்றும் Paytm நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
English Summary
Support gambling? - Google removes Pay-tm from Play Store