KOLNews

ஜெருசலத்தில் பதற்றம் ..! இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே தொடர் மோதல்..20 பேர் பலி..!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே உள்ள நீண்ட பகை உலகம் அறிந்ததே..!  பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியான காசாமுனையில் ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இஸ்ரேலை பொறுத்தவரையில் அது ஒரு பயங்கரவாத இயக்கம்.அவர்களும், இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும்  பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேல், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் வழிபாடு செய்வதற்கு பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததுடன் ,அங்கு ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானதாக கருதப்படும் பகுதிகளில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது.

இதனை கண்டித்து, ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மதவழிபாட்டு தளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த போராட்டத்தை தடுக்க முயன்ற இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பாலஸ்தீனியர்கள் பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர். 

இந்த போராட்டத்தில் பாலஸ்தீனியர்கள் தாக்கப்படத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை குறிவைத்து காசா முனை பகுதியில் ஆட்சி செய்துவரும் ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் அமைந்துள்ள ஒருசில வீடுகளில் சிறு பாதிப்பு ஏற்பட்டபோதும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

20 Palestinians killed as tensions mount on Gaza border | Arab News

ஆனால், தாக்குதல் நடந்த சில நிமிடங்களில்  இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். இப்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும், பாலஸ்தீனர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி வருவதால் மோதல் அதிகரித்து ஜெருசலேமில் மிகவும் பதற்றமான \சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், இரு தரப்பும் தாகவுதல்களை கைவிட கோரி  ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.   இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டது. இஸ்ரேல் மிகப்பெரிய பலமுடன் திருப்பி கொடுக்கும்’ என தெரிவித்திருப்பதால், .அங்கு தொடர்ந்து மோதல் நிலவும் சூழல் தொடர்கிறது.

English Summary

Tension in Jerusalem ..! 20 killed in Israeli-Palestinian clash

Latest Articles

KOLNews