KOLNews

அது.. இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை..! - வங்கதேச பிரதமர்..!

இந்தியாவில் குடியுரிமை சட்டம் கொண்டு வருவது குறித்து அண்டை நாடான பாகிஸ்தான் முரண்பாடான கருத்துக்களை கூறும் நிலையில், மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா,  அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக,மேற்கு ஆசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு சென்றுள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ' சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. இந்த விவகாரத்தால் வங்கதேசத்துக்கு எந்த பிரச்னையும் வராது என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்' என கூறியதுடன் "அசாம் மாநிலத்தில், என்ஆர்சி கணக்கெடுப்பு நடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து யாரும், வங்கதேசத்திற்கு வரவில்லை. அதேபோல், வங்கதேசத்தில் இருந்து எந்த சிறுபான்மையினரும் இந்தியாவுக்கு செல்லவில்லை. இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னைதான். ஆனால், தற்போதைக்கு தேவையில்லாத ஒன்று'. என தெரிவித்தார்.

English Summary

That is the domestic problem of India ..! - Prime Minister of Bangladesh ..!

Latest Articles

KOLNews