KOLNews

ஒப்பந்தம் முடிந்தது..! - ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை உறுதிப்படுத்தும் போரிஸ் ஜான்சன்

ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் பிரிட்டன் இடையேயான பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேறியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பு மூலம் பிரிட்டன் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பான மசோதா அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டது.  அத்துடன், .2020 ஜனவரி.31-ம் தேதி பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறிது. 

Brexit: Toyota, Nissan to seek reimbursement from UK if Brexit talks fail:  Report, Auto News, ET Auto

இருப்பினும் விதிகளின்படி பிரிட்டனுக்கு 11 மாதம் கெடு விதிக்கப்பட்டது. புதிய விதிகளை நிர்ணயிப்பதற்கான கெடு நிறைவடைய (டிச.31) ஒரு வாரம் உள்ளது. இதற்கிடையே முன்னதாகவே பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம், பிரிட்டன் அரசியலை சிக்கலில் வைத்திருந்த  ப்ரெக்ஸிட் பிரச்சனை முடிவுக்குவந்துள்ளது என அங்கு பலர் உணர்கிறார்கள்.   முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இது தொடர்பாக வெளியிட்ட தனது டுவிட்டரில் 'ஒப்பந்தம் முடிந்தது 'என பதிவிட்டுள்ளார்.

English Summary

The deal is over ..! - Boris Johnson confirms Britain's exit from European Union

Latest Articles

KOLNews