KOLNews

இந்தோனேஷியாவிலிருந்து சென்ற விமானம் மாயம் ..! - 62 பேர்களின் கதி என்ன..?

ஸ்ரீவிஜயா நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 60-க்‍கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. கிளம்பிய 4 நிமிடங்களிலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

முன்னதாக மேற்கு கலிமந்தன் மாகாணத்தை நோக்‍கி புறப்பட்ட இந்த விமானம்,  ஒரு வினாடிக்‍குள் 10,000 அடி உயரத்தை அடைந்தது என்றும், பின்னர் 4  நிமிடங்களில் அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்‍கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 27 ஆண்டுகளுக்‍கு முன் வாங்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த விமானம், போயிங் நிறுவன தயாரிப்பாகும். இந்நிலையில், மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்‍கிவிடப்பட்டுள்ளன என இந்தோனேசிய விமானப் போக்‍குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary

The flight from Indonesia is absconded ..! - What is the fate of 62 people ..?

Latest Articles

KOLNews