KOLNews

இதைத்தான் சாப்பிட்டேன் ..! - கரோனாவிலிருந்து மீண்ட பெண்ணின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்..

பிரிட்டனை சேர்ந்த டாக்டர் கிளார் ஜெராடா. 60 வயதான இவர் பொது மருத்துவர்களின் ராயல் கல்லூரியின் (ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ்) முன்னாள் தலைவர். 

இவர், நியு யார்க்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டுவிட்டு லண்டனுக்குத் திரும்பியபோது கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானார்.

அதையடுத்து, காய்ச்சல், நடுக்கம், தொண்டயில் புண், தலைச்சுற்றல், மூட்டுகளில் வலி, தலைக் குத்தல், தொடர்ந்து இருந்த இருமல் மற்றும் சளியால் மார்பு வலி எல்லாமும் கிளாருக்கு இருந்தது.

இருப்பினும், டாக்டர் கிளார் ஜெராடா இப்போது நோய்த் தாக்குதலிலிருந்து மீண்டுவிட்டார். 

இந்நிலையில், முதியவர்களாக இருந்தாலும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட பெரும்பாலானவர்களால் நிச்சயமாக நலம் பெற முடியும் என்று நம்பிக்கையூட்டுகிறார் கிளார்.

"என் முன்னால் தரையில் கிடக்கும் 50 பவுண்ட் தாளைக்கூட குனிந்து என்னால் எடுக்க முடியாத அளவில் சத்து குறைய்வு ஏற்பட்டது. உடம்பு அடித்துப் போட்டுவிட்டது போல் இருந்தது , ஆனால், நான் ஒருபோதும் என் உயிருக்கு ஆபத்து, பிழைக்க முடியாது என்று நினைக்கவேயில்லை.நோய்த் தொற்றுக்கு எதிராக எந்த அளவுக்குப் போராட முடியுமோ அந்த அளவுக்கு என்னுடைய உடல் போராடியது.

 

மக்கள் கவலைப்பட தேவையில்லை,  என்னைப் போல நிச்சயம் நலம் பெற்றுவிட முடியும். இதுவொன்றும் விதிக்கப்பட்ட மரண தண்டனை அல்ல'" என்கிறார் கிளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது - 

முதலில், வறண்ட இருமலும் விமானத்தில் நீண்ட தொலைவு பயணத்தில் சுவாசித்த காற்றும்தான் காரணம் என நினைத்தேன். ஆனால், காய்ச்சல் மட்டும் 102 டிகிரி பாரன்ஹீட் இருந்ததை என்னால் ஒதுக்கிவிட முடியவில்லை.

அதுக்கடுத்த ஐந்து நாள்களுக்கு, கழிப்பறைக்குச் செல்லும் நேரம் தவிர, முழுவதும் படுத்த படுக்கையாகவே இருந்தேன். பிறகு அந்த அறிகுறிகள் மறைந்துவிட்டன. அயர்ச்சியும் நாக்கில் சுவைக் குறைவும்தான் இருந்தது. 

எனக்கு கரோனாவிலிருந்து நலம் பெற  பிரமாதமான மருந்துகள் எல்லாம் எதுவும் தேவைப்படவில்லை. நாள் ஒன்றிக்கு மூன்று வேளை  இரண்டிரண்டு பாராசிட்டமால் மாத்திரைகள் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவைதான் எனக்குத் தேவைப்பட்டன.

அத்துடன், எனக்கு மீண்டும் பசி எடுக்கச் செய்வதில் கடவுள் இயற்கையாகத் தந்த பெனிசிலினான கோழி சூப் உதவியது.

கரோனா பாதிப்பு அச்சமூட்டுவதாகத்தான் இருந்தது, உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தால் அல்ல, அதனுடைய வலியினால் தான்.!, என்று தெரிவித்துள்ளார் டாக்டர் கிளார் ஜெராடா.

English Summary

This is what I ate ..! - Woman's reassuring words from Corona ..

Latest Articles

KOLNews