KOLNews

டிரம்ப் நன்றாக இருக்கிறார் ..ஆனால்..? - என்ன நினைக்கிறார்கள் மருத்துவர்கள் ?

74 வயதாக்கும் அமெரிக்க அதிபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவியும் தொற்று ஆளாகியுளார்.

டிரம்ப்பின் உடல் நிலை குறித்து கனெக்டிகட் பல்கலைக்கழக சுகாதார அமைப்பின் தொற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் டேவிட் பனச் கூறுகையில், “ தொற்றுக்கு டிரம்ப்க்கு 74 வயது என்பது தான் முதல் ஆபத்துக்குரிய  காரணியாக இருக்கும்” என குறிப்பிட்டார்.

அதை போல பிற மருத்துவர்களின் பார்வையில், டிரம்ப் உடல் பருமனாக இருப்பதும், அவரது பி.எம்.ஐ. என அழைக்கப்படுகிற அவரது உடல் நிறை குறியீட்டு எண் 30-ஐ தாண்டி இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது..இதற்கிடையே, தனக்கு கொழுப்பு கூடுதலாக இருப்பதால் அதனை குறைக்க மருந்து எடுத்துக்கொள்கிறார். என்பதும்,  ஆண் என்பதுவும் கூட கொரோனா தொற்று விஷயத்தில் பாதகமான ஒரு அம்சமாக மருத்துவ நிபுணர்கள் கருதுவதாக சொல்லப்படுகிறது.

English Summary

Trump is fine..but ..? - What do doctors think?

Latest Articles

KOLNews