அமெரிக்கா. அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்கா நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியானார்.
அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றது தெரிந்ததே.. இந்நிலையில், இவர் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது. அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே தற்போதைய ஆயிரக்கணக்கான அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் திரண்டதுடன், பாராளுமன்ற கட்டிடத்திற்குள்ளும் நுழைந்தனர்.
அத்தையடுத்து அங்கு தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கண்ணிர் புகைக்குண்டு வீசி டிரம்ப் ஆதரவாளர்களை கலைக்க முயன்றனர். அவர்கள் கலைந்து செல்லாததால் தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் பொறுப்பில் உள்ள தற்போதைய துணை அதிபர் மைக் பென்சிடம்,அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை செல்லாது என அறிவிக்கும்படி டிரம்ப் வலியுறுத்தினார். எனினும் டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
English Summary
Trump supporters in protest - Woman shot dead ..!