KOLNews

இந்தோனேசியாவில் பயங்கர நில நடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை..! - எதுக்கும் பீச் பக்கம் போகாதீங்க..!

இந்தோனேசியாவில் வெள்ளி மாலை ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவில் பதிவான சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , 

இன்று மாலை 5 .30 மணியளவில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் வெள்ளி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

தெலுக் பிடங் நகரத்திலிருந்து 227 கிமீ  தூரத்தில் 59 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை  வெளிவராத நிலையில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று தமிழகத்தில், புதுக்கோட்டை அடுத்த கடலோர பகுதியான ஜெகதாப்பாட்டினத்தில் கடல் 150 மீட்டர் உள்வாங்கியது. அதையடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைபடகுகள் பல தரைதட்டி நின்றன.

முன்னதாக, 2004ல்  தமிழகத்தை சுனாமி தாக்கிய போது கூட தமிழகத்தின் சில  கரையோர பகுதிகளில் கடல் உள்வாங்கியது நினைவிருக்கலாம்.

English Summary

Tsunami alert in Indonesia - Don't go to the beach for anything ..!

Latest Articles

KOLNews