KOLNews

கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி மறுக்கும் அமெரிக்கா..! -- வணிகம் காரணமா..?

கொரோனா விஷயத்தில் இந்தியாவுடனா உறவில் நட்பு வேறு, வணிகம் வேறு என்கிற நிலையில் அமெரிக்கா இருப்பதாக தெரிகிறது. ஒரு புறம் கொரோனா இரண்டாம் அலையில் ஆதரவு கரம் நீட்டும் அமெரிக்கா, அங்கு, கொரோனா அவசரகால தேவைக்காக கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் அனுமதி மறுத்துள்ளது . 

பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்து அதனை இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் அவசரகால தேவைக்கு அனுப்பி வருகிறது.

அந்த வகையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் அமெரிக்க ஒப்பந்ததாரரான ஒருஜென் நிறுவனம் சார்பில் கோவேக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியிருந்தது .ஆனால், கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த ஒருஜென் நிறுவனம் அளித்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நிராகரித்துள்ளது . 

தடுப்பூசி தயாரிப்பின் மூலம் அமெரிக்கா பெரும் வணிகத்தை எதிர்பார்த்து இருக்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஆச்சரியப்படத்தக்கதல்ல என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

English Summary

US denies covaxin vaccine - Is it because of business ..?

Latest Articles

KOLNews