KOLNews

பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குங்கள்..! - வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நியூயார்க்,  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,  குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தப்படும் நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகித்தை அதிகரிக்கப்பதன் மூலம்.கொரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டுவரலாம் என தெரிவித்துள்ளார்.

சென்ற வருடமே, வளர்ந்த நாடுகளை எச்சரித்திருந்த உலக சுகாதார நிறுவனம், பூஸ்டர் டோஸ்களை முன்னெடுக்கும் வளர்ந்த நாடுகள், இன்னும் தடுப்பூசி வாங்க பொருளாதாரம் இல்லாமல், 25 சதம் கூட தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குங்கள். உலகின் எதோ ஒரு மூலையிலிருந்தும்  கொரோனா மீண்டும் பரவும் ஆபத்து இருப்பதால் ,உலக மக்கள் அனைவர்க்கும் தடுப்பூசி கிடைக்கும்படி செய்வது வளர்ந்த நாடுகளின் பொறுப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. 

Why did the world's pandemic warning system fail when COVID hit?ஆனால் வளர்ந்த நாடுகள் அதற்கு பெரிதாக செவியெடுக்காத நிலையில், தற்போது 3ஆம் அலைக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது டுவிட்டரில், “கொரோனா தொற்று நிச்சயமாக தோற்கடிக்கபட வாய்ப்புள்ளது. அதற்கு உலக நாடுகளில் உள்ள அனைத்து அரசாங்கமும், உற்பத்தியாளர்களும் இரண்டு காரியங்களை உறுதி செய்ய வேண்டும். முதலாவதாக குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தப்படும் நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகித்தை அதிகரிக்க வேண்டும்.

இரண்டாவதாக, தடுப்பூசிகளைப் பெறுவதற்கான வளங்களை உறுதி செய்ய வேண்டும். உலகில் எல்லா இடங்களும் பாதுகாப்பு அடையும் வரை, எங்கும் பாதுகாப்பு இருக்காது” என்று தெரிவித்துள்ளார். 

English Summary

Vaccinate backward countries ..! - World Health Organization's call for developed countries

Latest Articles

KOLNews