KOLNews

போர் வீரனின் காதல்..! - உலக புகழ் பெற்ற காதல் கடிதம்..!

சுல்லிவன் பல்லாவோ எனும் ராணுவ வீரன் அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது தன் மனைவிக்கு எழுதிய கடிதம் புகழ் பெற்றது . அக்கடிதம் : 

" சாரா , உன் மீது நான் கொண்டுள்ள காதல் முடிவில்லாதது, ஆயினும் , தாய்தாட்டின் மீது தான் கொண்டுள்ள பற்று தடுக்க முடியாத நிலையில் என்னைப் போர்க்களத்திற்குக் கொண்டு வந்துள்ளது . 

உன்னோடு அனுபவித்த பேரின்பமளித்த கணங்களின் நினைவுகள் என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன . இவ்வளவு காலம் இத்தகைய இன்பத்தை எனக்களித்த இறைவனுக்கும் உனக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் . நான் திரும்பி வரவில்ணையன்ற நிலை ஏற்படும்போது , உன்னை நான் எந்த அளவு காதலித்தேன் என்பதையும் , போர்க்களத்தில் இறுதிமூச்சு விடும் போதும் உள் பெயரை உச்சரிப்பேன் என்பதையும் மறந்துவிடாதே . மரித்தவர்கள் பூமிக்குத் திரும்ப வந்து பிறர் காணாதவாறு தாங்கள் காதலிப்பவர்களைச் சுற்றித் திரிய இயலுமானால் நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன் . இளந்தென்றல் உன் கன்னத்தை வருடுமானால் அது என்னுடைய மூச்சுக் காற்றாகத்தான் இருக்கும் . குளிர்காற்று உன் நெற்றிப் பொட்டினைத் துடிக்கச் செய்யுமானால், அக்காற்று உன்னைக்கடந்து செல்லும் என்னுடைய ஆன்மாவாகத்தான் இருக்கும் . சாரா , எனக்காகத் துயரப்படாதே . நான் போய்விட்டேன் என்பதை எண்ணு, எனக்காகக் காத்திரு,  ஏனெனில், நாம் மீண்டும் சந்திப்போம் ' . 

இக்கடிதம் எழுதிய ஏழாவது நாள் சுல்லிவன் பல்லாவோ போர்க்களத்தில் மடிந்தார் . சாரா மறுமணம் செய்து கொள்ளவில்லை . வாழ்நாள் முழுவதும் விதவையாகவே வாழ்ந்தார் . 

English Summary

War hero's love ..! - World famous love letter ..!

Latest Articles

KOLNews