KOLNews

நாங்க நினைச்சா எதுவும் செய்வோம்..ஆங்..! - டுவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சியின் கணக்கையே ஹேக் செய்த ஹேக்கர்கள்..!

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரி(சிஇஒ) ஜேக் டோர்சியின், டுவிட்டர் கணக்கே  ஹேக் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஜேக்டோர்சியை பின் தொடரும் லட்சக்கணக்கான வலைத்தள வாசிகளுக்கு கடும் அதிர்ச்சியூட்டும் வகையில் தீடீரென ஜேக் டோர்சியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து இனவெறி கருத்துக்களும், நாசி ஜெர்மனிக்கு ஆதரவான கருத்துக்களும் பதிவிடப்பட்டன. 

அதன் பின் சிறிது நேரத்தில் அந்த பதிவுகள் நீக்கப்பட்டு விட்டன. 

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த டுவிட்டர் நிறுவனம், ஜேக் டோர்சியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்தது. 

இருப்பினும் , தனது சிஇஓ கணக்கையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத டுவிட்டர் நிறுவனத்தால், எங்கள் கணக்குகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்கிற வகையில் கேள்விகளை எழுப்பி டுவிட்டர்க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளனர் அதன் பயனாளர்கள்.

Image result for jack dorsey

இதற்கிடையே, டுவிட்டர் நிறுவனம் அளித்த விளக்கத்தில், தங்களது சொந்த பாதுகாப்பு அமைப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை என்றும் , டுவிட்டர் கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த மொபைல் எண் மூலமாக கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக கூறி ஒரு வழியாக சமாளித்துள்ளது,

English Summary

We'll do anything we can think of .. - Hackers hacked into Twitter CEO Jack Dorsey's account!

Latest Articles

KOLNews