உலகின் பல நாடுகளில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இளஞர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
உலகின் முன்னணி சமூகவலைதளங்களாக உள்ள ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம் போன்றவை இன்று மாலை திடீரென செயலிழந்தன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் செயலிழப்பு ஏற்பட்டது.
எனினும், மொபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
கணினியில் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மட்டுமே முடங்கின. இதைத்தொடர்ந்து, ட்விட்டர் சமூக வலைதளத்தில் #FacebookDown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. சில மணிநேரத்துக்கு பிறகே நிலைமை சீரானது. வழக்கம்போல் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை செயல்படத் தொடங்கின.
English Summary
WhatsApp, Facebook freezing - Youth get troubled