KOLNews

என்று தணியும் இந்த எத்தியோப்பியாவின் சோகம்..!

ஏழ்மை, பஞ்சம், பட்டினி என்றால் உனனே ஞாபகத்திற்கு வரும் நாடாக மாறியுள்ள எத்தியோப்பியாவில்,  90 சதவீத மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது .

உலகமெலாம் கொரோனா பெருந்தொற்றே பெருந்துயராக உள்ள  நிலையில், ஆப்ரிக்க நாடுகள் பல அதனினும் கொடுமையான  வறுமையோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றன 

 உலகின் மிகவும் பழைமையான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் எத்தியோப்பியா ஐ.நா வின் உறுப்பு நாடு , அணிசேரா இயக்கம் , ஆஃப்ரிக்க ஒற்றுமை அமைப்பு போன்றவற்றில் அங்கம் வகித்தாலும் , பசியின் கொடுமையை இந்நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக எத்தியோப்பியாவின் 'திக்ரின்னியா; மாகாணத்தில் உள்ள 90 சதவீத மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது .

 Secret UN report reveals fears of long and bitter war in Ethiopia | Ethiopia  | The Guardian

அங்கு  நிலவும் உள்நாட்டு மோதல் காரணமாக சுமார் 50 சதவீத மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும் , ஆயிரக்கணக்கானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா கவலை தெரிவித்துள்ளது  இது எதோ ஒன்றிரண்டு வருடங்களாக இல்லாமல் தசாப்தங்களாக தொடர்வதும் உலகின் பார்வை அதன் மீது பெரிதாக படாமல் செல்வதும் , மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக பாடுபடுவதாக கூறி கொள்ளும் பல சர்வதேச அமைப்புகளும் வெட்கப்படவேண்டிய விஷயமாக உள்ளது.

English Summary

When The tragedy of this Ethiopia that will alleviate ..!

Latest Articles

KOLNews