KOLNews

டிவி நாடகங்களில் பெண்கள் தோன்ற கூடாது..! - தடை விதித்த தலிபான்கள்

காபூல், டிவி நாடகங்களில் பெண்கள் தோன்ற ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்பப்பெற்ற தருவாயில் அங்கு  ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தாலிபன்கள்.அங்கு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் மேலு சில புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி, தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தித் தொகுப்பாளர்கள் கூட தலையை மறைத்துக் கொள்ளும் ஆடையை அணிந்து கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவற்றுடன், அங்கு இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தாலிபன் அரசு 8 புதிய விதிமுறைகளை விடுத்துள்ளது .

அதன்படி, ஷரியா சட்டங்கள் அல்லது இஸ்லாமிய சட்டங்கள், ஆப்கானிஸ்தானின் மதிப்புகள் ஆகியவற்றுக்கு எதிரானது என கருதப்படும் படங்களுக்கு தடை, ஆண்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை காட்டும் காணொலி படங்கள், மதத்தை கொச்சைப்படுத்தும் அல்லது ஆப்கானியர்களைப் புண்படுத்துவதாக கருதப்படும் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வெளிநாட்டு கலாச்சார மதிப்புகளை போற்றும் வெளிநாட்டுப் படங்கள் ஆகியவற்றை  ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட கூடாது என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

English Summary

Women should not appear in TV dramas ..! - Prohibited Taliban

Latest Articles

KOLNews