KOLNews

உலக சுகாதார நிறுவனம் அதிரடி..! - கொரோனாவுக்கான மருந்துபட்டியலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்

உலகின் அனைத்து மக்களுக்குமான கொரோனா மருந்துகளின் 'ரெம்டெசிவிர்' மருந்தை நீக்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.   அத்துடன், கொரோனாவுக்கு உரிய  சிகிச்சை முறைகளையும், மருந்துகளையும் பரிந்துரை செய்யும் எனவும் தெரிகிறது. 

நீண்ட வரிசைகளில் நின்று பல மணிநேரம் காத்திருந்து வாங்கிய 'ரெம்டெசிவிர்' மறுத்து குறித்து ஏற்கனவே பல மருத்துவர்கள் உரிய விளக்கத்தை தந்துள்ளார்கள். அதாவது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அனைவருக்குமே ரெம்டெசிவிர் மறுத்து தேவையில்லை என்றும், கொரோனாவுடன் கூடிய நிமோனியா காய்ச்சல் தென்படும் நிலையில், குறிப்பிட்ட காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மட்டுமே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இருப்பினும் துறை சார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்தும் தடுப்பூசிகளை போட மறுக்கும் பெருவாரியான மக்கள்  ரெம்டெசிவிர் மருந்தை வாங்க வரிசை கட்டி கால் கடுக்க நின்றனர்.

பொதுவாக ரெம்டெசிவிர் மருந்தானது ஜிலெட் சயின்ஸஸ் என்ற மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம். 'ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என்பது குறித்து எந்த வித ஆதாரமும் இல்லை என்பதால், கொரோனா நோயாளிகள் எத்தகைய தீவிரமான நோய் பாதிப்பு உடையவராக இருந்தாலும், அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க வேண்டாம்'  என்று தெரிவித் துள்ளது 

அதையடுத்து,  தற்போது கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான தகுதிப் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியிருந்தாலும், சம்பந்தப்பட்ட நாடுகளே இது குறித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

English Summary

World Health Organization in action ..! - Remdesivir removed from the list of drugs for corona

Latest Articles

KOLNews